மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டவர்களுக்கு மேலும் 200 ஏக்கர் நிலப்பரப்பு

- Advertisement -

துறைமுக நகரத்திற்கு இணையாக கொழும்பில் மேலும் 200 ஏக்கர் நிலப்பரப்பினை அரசாங்கம் சர்வதேசத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே சி அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றுக்கு  கருத்துரைக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவையின் அனுமதியினையும் அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வெளிவிவகார அமைச்சு அமையப்பெற்றுள்ள இடத்தினையும் மத்திய தபால்  அலுவலகம் அமைந்துள்ள பகுதி, மற்றும் தாமரை கோபுரம் அமைந்துள்ள பகுதி, ஹில்ட்டன் மற்றும் விளையாட்டு வளாகம் அமைந்துள்ள பகுதி  உளளிட்ட சில இடங்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜே சி அலவத்துவல குறிப்பிட்டுள்ளார்..

நாட்டின் தேசியம் தொடர்பில் மார்தட்டிக்கொண்ட அரசாங்கம் தற்பொழுது நாட்டின் பல பகுதிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz