மெய்ப்பொருள் காண்பது அறிவு

கெப்டன் உள்ளிட்ட குழுவினரிடம் இன்று வாக்குமூலம்

- Advertisement -

கொழும்பு துறைமுகத்திற்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில் தீப்பரவலுக்குள்ளான MV X-Press Pearl கப்பலின் கெப்டன் உள்ளிட்ட குழுவினரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் கடந்த 23 ஆம் திகதி துறைமுக பொலிஸ் பிரிவில்  மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய  வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சிங்கப்பூர் தேசிய கொடியுடன்   இந்தியாவிலிருந்து பயணித்த குறித்த  கப்பல் கொழும்பு  துறைமுகத்தில்  கடந்த 20 ஆம் திகதி இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில், தீப்பரவலுக்குள்ளான MV X-Press Pearl கப்பலின் கெப்டன் மற்றும்  25  பேர் கொண்ட குழுவினர் கடற்படையினால்  மீட்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதன்படி, குறித்த குழுவினரின் தனிமைப்படுத்தல் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில்   அவர்களிடமிருந்து  வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, MV X-Press Pearl கப்பலின் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நீர்கொழும்பு முதல் பானதுறை வரையிலான கடற்கரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த கடற்கரை பகுதியில் கழிவகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz