மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணத்தடை நீங்கினாலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்

- Advertisement -

பொதுப்போக்குவரத்து சேவை நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் நீண்ட தூர பஸ்சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்த சபை தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதேவேளை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பஸ் சேவைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்

அத்தியாவசிய கடமைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பஸ் பயணங்களை தவிர்த்து செயற்படுமாறும் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்

இதனிடையே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயணிகளை உள்வாங்குதல் அல்லது இறங்குவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவை கருதி நாளை முதல் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி அரச மற்றும் தனியார் துறை அலுவலக பணியாளர்களின் நன்மை கருதி நாளை முதல் மேலதிகமாக 5 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதிபொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்

இதன்படி நாளை அதிகாலை 5 மணிக்கு கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரையும் மற்றும் காலை 4.45 மணிக்கு மஹவ முதல் கொழும்பு கோட்.டை. வரையும் காலை 5.50 மணிக்கு சிலாபம் பகுதியில் இருந்து கொழும்பு கோட்டைவரையும் காலை 4.30 மணிக்கு பெலியத்தையில் இருஐந்து மருதானை வரையிலும் விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் பிற்பகல் வேளையில் மாலை 5.45 அளவில் கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி வரையிலும் அத்துடன் மாலை 6 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மஹவ வரையிலும் மற்றும் பிற்பகல் 5.18 அளவில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து சிலாபம் வரையும் மேலும் மாலை 4 மணிக்கு மருதானையில் இருந்து பெலியத்த வரையிலும் விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதிபொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்

இதேவேளை குறித்த ரயில்கள எந்தவொரு உப ரயில்நிலையத்திலும் நிறுத்தப்படமாட்டாது எனவும் ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது

அத்துடன் கரையோர மார்க்கங்களில் கொழும்பு கோட்டையில் இருந்து அலுத்கம . களுத்துறை பாணந்துரை கல்கிஸ்ஸ ரத்மலானை மொரட்டுவ ஆகிய பகுதிகளுக்கான ரயில் சேவை முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

களனிவெலி மார்க்கத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து அவிஸாவலை பாதுக்க கொஸ்கம வரையும் ரயில்சேவை முன்னெடுக்கப்படும் என யில்வே திணைக்களத்தின் பிரதிபொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz