மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் நடைமுறையாகும் விசேட கட்டுப்பாடுகள் – முழுமையான விபரம் உள்ளே..!

- Advertisement -

நாட்டில் இன்று இரவு 11 மணியில் இருந்து எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட் கிழமை அதிகாலை 4 மணிவரை முழு நேர பயணத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என்பதுடன், மீறி செயற்ப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிக்கபட்டுள்ளது.

- Advertisement -

எனினும், அத்தியாவசிய செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும் என்பதுடன், சேவையில் ஈடுபடுவோருக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை இரவு 11 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணிவரை மழ பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று முதல் தேசிய அடையாள அட்டை இலக்கக்தின் அடிப்படையில் பொருட் கொள்வனவில் ஈடுபடும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய அடையாள அட்டை கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப் பத்திரம் அகியன இந்த நடைமுறைக்கு பயன்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய அடையாள அட்டையில் 2, 4, 6, 8, 0 எனும் இரட்டை இலக்கங்களை இறுதி இலக்கமாகக் கொண்டவர்கள் இரட்டை இலக்க தினத்தில் வெளியில்செல்ல முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 1, 3, 5, 7, 9 ஆகிய ஒற்றை இலக்கங்களை இறுதி இலக்கமாகக் கொண்டவர்கள் ஒற்றை இலக்க தினத்திலும் வீடுகளில் இருந்து வௌியேற முடியுமென அறிவிக்கபட்டுள்ளது..

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளின் பொருட்டு மாத்திரமே மாகாணங்களுக்கிடையிலான பயண அனுமதி வரையறுக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை யாத்திரைகள் மற்றும் சுற்றுலாக்களை மேற்க்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மரணம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களில் இறுதிச் சடங்குகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதுடன், மரண வீடுகளில் 15 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, திருமண நிகழ்வுகளுக்கு மே 31 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, திருமணப் பதிவுகளில் பதிவாளர் உட்பட 15 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுப்போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைவாக பயணிக்க முடியும் என்பதுடன், வாடகை வாகனங்களில் சாரதியுடன் இரண்டு பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊழியர்கள் மற்றும் வீட்டிலிருந்து கடமையாற்றும் வசதிகளுடன் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவசியக் கூட்டங்கள் 10 பேருடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், செயலமர்வுகள், மாநாடுகள் என்பன வற்றுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது.

இதேவேளை, சில்லறைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், கடைத் தொகுதிகள், சந்தைகள், பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் வங்கிகளின் இட வசதியில் 25 வீதமானோருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேக்கரி, வீதியோரக் கடைகள், அழகுசாதன நிலையங்களில் இட வசதியின் பிரகாரம் 25 வீதமானோருக்கே உட்பிரவேச அனுமதி அளிக்கபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

ஜப்பானில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி, 7 லட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள்...

Developed by: SEOGlitz