மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசியினை செலுத்திக்கொண்டவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை

- Advertisement -

கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதனை மேலும் செம்மையாக்கும் வகையில் புதிய தொழிநுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டமைக்காக வழங்கப்படவுள்ள டிஜிட்டல் வடிவிலான புதிய அடையாள அட்டையில் குறித்த தடுப்பூசி வழங்கப்பட்ட திகதி, இடம், தடுப்பூசியின் வகை, மீண்டும் வழங்கப்படவேண்டிய திகதி உள்ளிட்ட பல தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் சில தினங்களுக்குள் பொதுமக்களுக்கு தடுப்பூசி தொடர்பான டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz