மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்திடம் திட்டமிடல்கள் இல்லை – எதிர்கட்சி குற்றச்சாட்டு

- Advertisement -

அரசாங்கத்தின் உரிய திட்டமிடல்கள் இன்மை காரணமாக, முதலாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட பலர், தற்போது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவிக்கின்றார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்…

’13 இலட்சம் அஸ்டரா செனிகா தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றன. அவற்றில் முதலாம் இரண்டாம் டோஸ்கள் வழங்கப்பட்டால் ஆறரை இலட்சம் மக்களுக்கே அவை போதுமானது. ஆனால் கிடைக்கப்பெற்ற 13 இலட்சம் தடுப்பூசிகளையும் எத்தகைய திட்டங்களும் இல்லாமல் 9 இலட்சம் மக்களுக்கு முதலாம் டோஸ்களை வழங்கியுள்ளனர். தற்போது முதலாம் டோஸ் வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் வழங்க போதுமானதாக இல்லை. தற்போது 3 இலட்சம் டோஸ்களே அரசாங்க கையிருப்பில் உள்ளன. எனவே திட்டமிட்ட அடிப்படையில் வழங்கி இருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டருக்காது. முன்னுரிமை அடிப்படையில் சுகாதார தரப்பினர் மற்றும் முப்படையினருக்கு வழங்கி இருந்தால் இரண்டாம் டோஸ்ஸும் வழங்கி பூரணப்படுத்தி இருக்கலாம். இன்று பூரணமாக ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு கூட வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இதேவேளை, அரசாங்கமே புத்தாண்டு காலத்தில் மக்களை ஒன்றிணைக்கச் செய்யும் நடவடிக்கைகளை எடுத்தது. தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கைகள், மரண எண்ணிக்கைகள் குறித்தும் பிழையான தரவுகளை அரசாங்கம் வழங்கி வருகிறது’

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz