மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான முழுமையான விபரங்கள்

- Advertisement -

நாட்டில் நேற்றைய நாளில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 387 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பிலியந்தலையில் 81 பேரும், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 64 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் 330 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மீகஹதென்னவில் 52 பேரும், பதுரலியவில் 41 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 297 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிட்டம்புவையில் 49 பேரும், மீரிகமவில் 38 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் 102 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 88 பேரும், காலி மாவட்டத்தில் 80 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் 71 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் 70 பேரும், கண்டி மாவட்டத்தில் 66 பேரும், குருணாகலை மாவட்டத்தில் 51 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் 109 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 11 ஆயிரத்து 67 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அரசாங்கத்தின் 51 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5 ஆயிரத்து 701 பேரும், 58 தனியார் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5 ஆயிரத்து 366 பேரும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 12 மாவட்டங்களுக்குட்பட்ட 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், இரண்டு மாவட்டங்களுக்குட்பட்ட 6 பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz