மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட நபர் ஒருவர் கைது

- Advertisement -

தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான நடவடிக்கைகளை சமூக வலைத்தளத்தின் ஊடாக முன்னெடுத்த சந்தேக நபர் ஒருவர் ஏறாவூர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த தியேட்டர் மோகன் எனப்படும் 56 வயதான நவநீதன் பிள்ளை மோகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறித்த சந்தேக நபரின் சமூக வலைத்தள கணக்குகளைப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏறாவூர் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், அவரிடமிருந்து தொலைபேசி ஒன்றும் Apple IPad ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மட்டக்களப்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கத்தின் கணினி விசாரணைப் பிரிவின் உதவியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த சந்தேக நபரின் மீது மட்டக்களப்பு, ஏறாவூர், கரடியனாறு பொலிஸ் பிரிவுகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 14 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த சந்தேகநபரை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்  72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 5 ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz