மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கர்ப்பிணித்தாய்மார்கள் 70 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

- Advertisement -

நாட்டில்   கர்ப்பிணித்தாய்மார் 70 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி  டீ சில்வா   இதனை தெரிவித்துள்ளார்

- Advertisement -

 

நாட்டில் கர்ப்பிணித்தாய்மார்  சுமார் 70 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் அனைவரும் கொரோனா  தடுபபு சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கர்ப்பிணித்தாய்மார்கள் இயலுமானவரை பயணங்களை தவிர்த்து செயற்பட வேண்டும்.  பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பகுதிகளுக்குள்  பிரவேசிப்பதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரையான  குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் தற்போது சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். வீடுகளில் எவரேனும் ஒருவருக்கு சுவாச நோய் உட்பட ஏதேனும் தொற்று நோய்கள் இருப்பின்   அவர்களிடம்  இருந்து குழந்தைகளை தனிமைப்படுத்த வேண்டும்.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியினை ஏற்படுத்தும் உணவுகளை வழங்க வேண்டும். குறிப்பான வெளியிடங்களில் கடைகளில் விற்கப்படும் ஆகாரங்கள் வழங்குவதை  தவிர்த்து  செயற்பட வேண்டும்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz