மெய்ப்பொருள் காண்பது அறிவு

WHO வின் அனுமதியின் பின்னரே சினோபார்ம் தடுப்பூசியினை பயன்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்

- Advertisement -

சீனாவின்   சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு   உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னரே அதனை அவசர பாவணைக்கு உட்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என   தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை   தெரிவித்துள்ளது.

இதேவேளை  சினோபார்ம்  தடுப்பூசி   அவசர பயன்பாடு நிமித்தம்  உலக சுகாதார ஸ்தாபனத்தின் காத்திருப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக   தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவர்  வைத்தியர் ரஷிதா விஜயவந்த தெரிவித்துள்ளார்

- Advertisement -

சீன அரசாங்கம்   தமது நாட்டு  தயாரிப்பான சினோபார்ம் கொரோனா தடுப்பூசியினை  உலகின் பல நாடுகளுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 6 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில்   மேலதிகமாக மற்றுமொரு தொகை கொரோனா தடுப்பூசியினை வழங்குவதற்கு  சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு முன்னதாக  தெரிவித்திருந்தது.

சீனபாதுகாப்பு அமைச்சரின்  இலங்கை விஜயத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்த சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டில் உள்ள சீனபிரஜைகளுக்கு  வழங்கப்பட்டுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்று தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz