மெய்ப்பொருள் காண்பது அறிவு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

- Advertisement -

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது.

மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி அளவில் குஜராத் கடற்பிராந்தியத்தை ஊடறுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்றிக் வேகமானது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படுமென அறிவிக்கபட்டுள்ளது.

மேலும், இந்த கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு முதல், காலி ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படுமென குறிப்பிடபட்டுள்ளது.

இதன் காரணமாக காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பிராந்தியங்களுக்கு  கடற்றொழிலாளர்களை செல்ல வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

மேலும், ஏனைய கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுப்படும் மீனவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்ப்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், கடற்பிராந்தியங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை காணப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்க்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, காலி, மாத்தறை, நுவரெலிய மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் இடியுடன்கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz