மெய்ப்பொருள் காண்பது அறிவு

மே தினம் தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகளின் விசேட அறிவிப்பு

- Advertisement -

நாட்டில் தற்போது கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் இணையதளத்தினூடாக தமது மே தின கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளன,

இன்றைய மே தின நிகழ்வுகள் தொடர்பில் ஒவ்வொரு கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை அறிவித்துள்ளன.,

- Advertisement -

தமது கட்சியின் மேதினக் கூட்டம் இன்று இணையத்தளம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பிரகடனப்படுத்தப்பட்ட இன்றைய நாளில் அதனை நினைவு கூறுவதற்கு இயலாமல் போயுள்ளமை கவலைக்குரிய விடயமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் மே தினம் தொடர்பான தமது கட்சியின் அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்

மே தினத்தை மையப்படுத்திய செய்தியுடன் தமது மேதின நடவடிக்கைகளை வரையறுத்துக் கொள்வதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது,

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணியினை இணையமூடாக முன்னெடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்

.
இதனிடையே நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு மே தினம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz