மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூறாவளியாக மாற்றமடைந்துள்ள காற்றழுத்தம்

- Advertisement -

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியாக மாற்றமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி டுவட் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சூறாவளியானது வடக்கு நோக்கி நகர்வதுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி அளவில் குஜராத் மற்றும் பாகிஸ்தான் கடற்பிராந்தியங்களை ஊடறுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு வட மத்திய வட மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலேமீற்றர் வேகத்தில் அதிகரித்து காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டின் பல மாவட்டங்களில் இன்று 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி சப்ரகமுவ மாகாணம் உட்பட காலி மாத்தறை நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பல இவ்வாறு மழைவீழ்ச்சி பதிவாகும் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்றவானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளன.

இதன்படி களனி கங்கை களு கங்கை கிங் கங்கை நில்வளா கங்கை மகா ஓய அத்தனகலு ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz