மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா அச்சம் – இந்து ஆலயங்களில் புதிய நடைமுறை..!

- Advertisement -

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்து ஆலயங்களுக்கான புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய பொதுமக்கள் ஒன்றுகூடுவது தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, இந்து ஆலயங்களுக்கான புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, ஆலயமொன்றின் கட்டட தொகுதி மற்றும் திறந்த வெளி ஆகியன உட்பட தனிநபர் வழிபாட்டுக்கு ஒரு நேரத்தில் 50 பேரை மாத்திரமே அனுமதிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், போதிய இடவசதி அற்ற ஆலயங்களில் பிரதேச பொது சுகாதார பரிசோதகரினால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மாத்திரம் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆலயங்களின் வழமையான பூஜை மற்றும் தனிநபர் வழிபாடுகள் தவிர்ந்த, வேறு எந்தவொரு கூட்டு நடவடிக்கைகள் அல்லது ஒன்றுகூடல்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என ஆலய அறங்காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அவ்வாறான நிகழ்வொன்றை நடத்துவதற்கான தேவை ஏற்படும் பட்சத்தில் பிரதேச பொது சுகாதார பரிசோதகரின் அனுமதி பெறப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆலயங்களில் எப்போதும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதுடன், ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேண வேண்டும் என, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள எல்லா ஆலயங்களும் அறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz