மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை – விசேட சுகாதார வழிமுறைகள் வெளியீடு..!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை குறித்து சுகாதார அமைச்சு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிவரை நாட்டு மக்கள் மிகவும் அவதானமாக செயற்ப்படவேண்டு மெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விசேட சுகாதார வழிமுறைகளையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதில் மிகமுக்கியமாக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுதல் என்பன கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய தேவைகள் அல்லது அனுமதியளிக்கப்பட்ட செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு, வௌியே செல்வதாயின், ஒரு குடும்பத்தில் இருந்து இருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுப் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பேருந்து மற்றும் ரயில்களில், ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

மேலும், கார்கள் மற்றும் முச்சக்கரண வண்டிகளில் அதிகபட்சம் இருவர் மாத்திரமே பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில், தேவைக்கு ஏற்ப பணியாளர்களை ஈடுபடுத்துமாறும், ஏனைய நபர்களுக்கு வீடுகளில் இருந்து பணிபுரிவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செயலமர்வுகள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்த , மண்டபத்தின் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமே பயன்படுத்த வேண்டும் எனவும், 50 பேருக்கு மேற்படாத வகையில் அவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிகை அலங்கார நிலையம், அழகுக் கலை நிலையங்கள், பேக்கரி நிறுவனங்கள், திறந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்களில், 50 வீதமானவர்களை மாத்திரமே அனுமதிக்க வேண்மடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளில், 50 வீதம் மாத்திரம் அனுமதி வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக வகுப்புக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கு 150 பேருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்க முடியும் எனவும், திருமண மண்டபங்களில் 50 வீதமானவர்களுக்கே அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளக மற்றும் வெளியிடங்களில் நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளை நடத்தவும், பொது இடங்களில் ஒன்றுகூடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், மதஸ்தலங்களில் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, பரப்பளவில் 50 வீதமானவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், திரையரங்களில் 25 வீதமானவர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் எனவும், சிறுவர் பூங்காக்கள் மற்றும் கரையோர களியாட்ட கூடங்கள் என்பன மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்கரையோரங்களில் நடமாடுவதற்கு மாத்திரமே முடியும் எனவும், அவ்வாறான இடங்களில் ஒன்று கூட முடியாது எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz