மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலதிக வகுப்புக்களை நடத்த தடை – மேலும் சில முக்கிய நடைமுறைகள்..!

- Advertisement -

செயலமர்வுகள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்த , மண்டபத்தின் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமே பயன்படுத்த வேண்டும் எனவும், 50 பேருக்கு மேற்படாத வகையில் அவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிகை அலங்கார நிலையம், அழகுக் கலை நிலையங்கள், பேக்கரி நிறுவனங்கள், திறந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்களில், 50 வீதமானவர்களை மாத்திரமே அனுமதிக்க வேண்மடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளில், 50 வீதம் மாத்திரம் அனுமதி வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக வகுப்புக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கு 150 பேருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்க முடியும் எனவும், திருமண மண்டபங்களில் 50 வீதமானவர்களுக்கே அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளக மற்றும் வெளியிடங்களில் நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளை நடத்தவும், பொது இடங்களில் ஒன்றுகூடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், மதஸ்தலங்களில் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, பரப்பளவில் 50 வீதமானவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், திரையரங்களில் 25 வீதமானவர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் எனவும், சிறுவர் பூங்காக்கள் மற்றும் கரையோர களியாட்ட கூடங்கள் என்பன மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்கரையோரங்களில் நடமாடுவதற்கு மாத்திரமே முடியும் எனவும், அவ்வாறான இடங்களில் ஒன்று கூட முடியாது எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz