மெய்ப்பொருள் காண்பது அறிவு

PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கத் தீர்மானம்!

- Advertisement -

நாளாந்தம் பி சி ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை 15 ஆயிரமாக அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது,

தமிழ் சிங்கள புதுவருடத்திற்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள அபாய நிலைமையினை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நேற்று  இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,

மேலும் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள கட்டில்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும் நோயாளிகளுக்கு தேவையான அதிக உயர் அழுத்தத்திலான
ஒக்‌ஸிஜன் வழங்கவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய மற்றும் மாவட்ட மட்டத்தில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான வைத்தியசாலைகளை உருவாக்கி அதற்கான வசதிகளை வழங்கவும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது,

அத்துடன் தனிமைப்படுத்தல் விதிகளை கடுமையாக அமுல்படுத்தவும் இதனை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் தீர்மானிக்கப்படடுள்ளது.

இதேவேளை, வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் உள்ள 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்த நிலையில், வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz