மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி – சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு..!

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

- Advertisement -

கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற இந்த தற்கொலை தாக்குதல்களினால் 250 க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 500 பேர் வரை காயமடைந்திருந்தனர்.

மிலேச்சத்தனமான இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேவாலயங்களில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, பிரதான நிகழ்வு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன், பேராயரின் கோரிக்கைக்கு அமைய காலை 8.45க்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், புனித பாப்பரசரின் விசேட அறிக்கையொன்றும், இலங்கைக்கான வத்திக்கான் தூதுவரால் இதன்போது வெளியிடப்பட்டது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் ஆகியன கவனயீனமாக செயற்படுவது கவலையளிப்பதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்று வரும் பிரதான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்படி, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திவேண்டி வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கபட்டன.

அத்துடன், யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டு சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றன.

இதேவேளை, மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் நிகழ்வுகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேலும், மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் இன்றைய தினம் விசேட சர்வமத வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மன்னார் புனித செபஸ்டியன் தேவாலயத்தில் இன்று விசேட ஆராதனைகள் முன்னெடுக்கபட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நாடாளுமன்றத்தில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு நாடாளுமன்றத்தில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளதை அடையாளப்படுத்தும் விதமாக, எதிர்க்கட்சியினர் கறுப்பு நிற ஆடையுடன் நாடாளுமன்றத்துக்கு சமூகமளித்திருந்தனர்.

மேலும், ஆளுந்தரப்பினர் கைகளில் கறுப்புப் பட்டியொன்றை அணிந்து நாடாளுமன்றத்துக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறாத வண்ணம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz