மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆண்டுகள் இரண்டு கடந்தும் நீதிக்காய் இரந்து நிற்கும் மக்கள்!

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

- Advertisement -

கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற இந்த தற்கொலை தாக்குதல்களினால் 250 க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 500 பேர் வரை காயமடைந்திருந்தனர்.

மிலேச்சத்தனமான இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேவாலயங்களில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான இலக்காகக் காணப்பட்ட, கொச்சிக்கடை புனித அந்தோனேியார் தேவாலயம் மற்றும் கட்டுவாப்பிட்டிய சென் செபஸ்டியன் தேவாலயம் ஆகியவற்றில் இன்று விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், காலை 8.45 க்கு மணிகள் ஒலிக்கவிடப்பட்டு, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

மேலும், புனித பாப்பரசரின் விசேட அறிக்கையொன்று, இலங்கைக்கான வத்திக்கான் தூதுவரால் வெளியிடப்படவுள்ளதாக, கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கெப்பிட்டல் செய்திப் பிரிவு கொண்டுவரும் விசேட தொகுப்பு அடுத்து.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz