மெய்ப்பொருள் காண்பது அறிவு

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

- Advertisement -

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான்
தெரிவித்துள்ளார்

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது .

- Advertisement -

இதில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டார் .

இதன்போது மாகாணசபைத் தேர்தல்களை புதியமுறைமையின் கீழ் உத்தேசிக்கப்பட்ட இரு வழிமுறைகளில் நடத்துவது தொடர்பில் தீர்க்கமாக ஆராயப்பட்டுள்ளது

இந்த நிலையிலேயே, முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட வழிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் முறைமை குறித்து தமது ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் முன்வைக்குமாறு வலியுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இதற்கான உத்தேசிக்கப்பட்ட திட்டவரைபு கட்சி பேதமின்றி மலையக மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் வகையில் வழிமுறைகளை வகுத்து மிக விரைவில் சமர்ப்பிக்கப்படும் என செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz