மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்புத் துறைமுக நகர விவகாரம் – அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

- Advertisement -

உத்தேச கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகள், முழுமையாக இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும் என அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றின் போதே, அரசாங்க பிரதிநிதியொருவர் இதனைக் குறிப்பிட்டார்

- Advertisement -

இதேவேளை, கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்டமூலம், நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவிக்கின்றார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

இதேவேளை, கொழும்பு துறைமுக நகரத்தில் இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளே நடைமுறைப்படுத்தப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு துறைமுக நகரத்தில் சீன பொலிஸாரின் செயற்பாடுகள் காணப்படும் என்ற விடயத்தை அவர் முற்றாக நிறாகரித்துள்ளார்.

மேலும், கொழும்பு துறைமுக நகரமானது முழுமையாக இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்குமென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு உத்தேச சட்டமூலமானது அரசியலமைப்பை மீறும் வகையில் உருவாக்கபட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி உயிர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மிதான விசாரணைகள் நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக பிரதம நீதியரசரினால் ஐந்து பேர்கொண்ட நீதிபதிகள் குழாமொன்று நியமிக்கபட்டுள்ளது.

இதன்படி, பிரதம நீதியரசரான ஜயந்த ஜயசூரிய தலைமையிலான இந்த குழுவில்  நீதிபதிகளான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக்தசில்வா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு உத்தேச சட்டமூலமானது அரசியலமைப்பை மீறும் வகையில் உருவாக்கபட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் என்பன இவ்வாறு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் இவ்வாறு மனுத்தாக்கல் செய்துள்ளன.

இதேவேளை, இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொதுவாக்கெடுப்புக்கு விடப்படவேண்டுமென உத்தரவிடுமாறும் மனுத்தாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சட்டமூலத்தின் 6 ஆவது சரத்தின் முதலாம் பிரிவில் கொழும்பு துறைமுகநகரத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்றுமதி மற்றும் வியாபார நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான தீர்மானம்  கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுவுக்கு மாத்திரம் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்த சட்டமூலமானது பாரிய அச்சுறுத்தலாக  அமையுமெனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், துறைமுக நகரத்தில் தொழில் புரியும் ஊழியர்களுக்கான வீசா விநியோகிப்பது முதல் அதற்கான அனுமதி வழங்குவதற்கான அதிகாரமும்  பொருளாதார ஆணைக்குழுவுக்கே உள்ளதாக சட்டமூலத்தின் சரத்தொன்றில் தெரிவிக்கபட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இதனால், தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துமெனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz