மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

- Advertisement -

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், சீனாவின் ஒரு பிராந்தியமாக கொழும்பு துறைமுக நகரம் அமையும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கபடவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சீனாவின் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்கு அமைவாகவே கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் சட்டங்களுக்கு அமைவாகவே கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாரேனும் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவார்களாயின் அதற்கு எதிராக செயற்பட பின்நிற்கப்போவதில்லை என அபயராம விகாரையின் விஹாராதிபதி முறுதட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத் தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதிபூண்டுள்ளதாக, கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீடத்தில் இன்று முற்பகல் வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அதன்படி செயற்படுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

நாட்டிற்கு முதலீடு அவசியமானது என்றபோதிலும், நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் சுயாதீனத் தன்மை ஆகியவற்றை பாதுகாப்பது முக்கியமானது எனவும், பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்த மனுவை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக நேற்றைய நாளிலும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz