கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கல்கிஸ்ஸை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காலி வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை ஆகியன இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சடலம் தெஹிவளை – களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பிலான சந்தேக நபரைக் கைது செய்யும் வகையில் மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.