தமிழ்நாடு மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது, திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்தொன்று தொடர்பில் மாநில தேர்தல் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.
மத்திய அமைச்சர்கள் இருவரின் உயிரிழப்பு தொடர்பில் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கருத்து தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பாரதிய ஜனதா கட்சி சார்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்று மாலை 5 மணிக்குள் உரிய விளக்கத்தை வழங்க வேண்டும் என, உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.