மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்ற பின்வரிசை  உறுப்பினர்களுக்கு  கேள்வி எழுப்புவதற்கு சந்தர்ப்பம்!

- Advertisement -

சபை ஒத்திவைப்பு நேரத்தின் போது நாடாளுமன்ற பின்வரிசை  உறுப்பினர்களுக்கு இரண்டு  கேள்விகளை எழுப்புவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான  பிரேரணைக்காக ஒதுக்கப்பட்ட தினங்களில்  20  நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,  கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்ட தினங்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தலா ஒரு கேள்விகள் வீதம் இரண்டு கேள்விகளை மாத்திரம் எழுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக  சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மேலும், உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்புவதற்காக ஐந்து நிமிடங்களும், உரிய அமைச்சர் பதில் வழங்குவதற்காக  ஐந்து நிமிடங்களும் ஒதுக்கப்படுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz