நாட்டில் மாறுபட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, டென்மார்க்கில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூன்று பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர், தனிமைபடுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 260 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 127 குணமடைந்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 618 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.