மெய்ப்பொருள் காண்பது அறிவு

பள்ளிவாசல்களில் தராவீஹ் மற்றும் ஜும்ஆ தொழுகைகளுக்கு தற்காலிக தடை

- Advertisement -

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சகல பள்ளிவாசல்களிலும் தராவீஹ் மற்றும் ஜும்ஆ தொழுகை உள்ளிட்ட ஏனைய கூட்டுப் பிராத்தனை நிகழ்வுகளை, தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், ஐவேளை தொழுகை நேரங்களில், பள்ளிவாசல்களில் அதிகபட்சம் 25 பேர் மாத்திரமே இருக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், தொழுகைக்காக வருகை தரும் சந்தர்ப்பங்களில், விரிப்புகளைக் கொண்டுவருமாறும், வீடுகளிலேயே வுழூ செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பள்ளிவாசல்கள் மூடப்பட வேண்டும் எனவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினாலும், வக்ப் சபையினாலும் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள், கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயங்களை பின்பற்றுவதற்கு, நடைமுறை சிக்கல்கள் காணப்படுமாயின், பள்ளிவாசல்களை மூடுவதற்கு உரிய நிர்வாகத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz