மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொடர்ந்தும் தீவிரமடையும் கொரோனா தொற்று…!

- Advertisement -

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 491 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 444 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 362 குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 445 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 10 ஆயிரத்து 338 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 9 ஆயிரத்து 209 பேர்  சிகிச்சை நிலையங்களில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 661 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாளொன்றுக்கு அதிக எண்ணிக்கையிலான பி.சிஆர். பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் நேற்று மாத்திரம் 23 ஆயிரத்து 730 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை சுமார் 2.7 மில்லியன் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு நகரில்,  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் பொலிஸார் மற்றும் வங்கி ஊழியர்கள் என, 170 பேருக்கு இன்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, அவர்களில் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கோட்டைமுனை  பொது சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்று உறுதியானவர்கள் கடமை புரியும் வங்கிகளின் ஏனைய ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz