மெய்ப்பொருள் காண்பது அறிவு

துறைமுகநகர சட்டமூலம் குறித்த விவாதம் – ஆளும் மற்றும் எதிர்தரப்பிடையே மீண்டும் மோதல்..!

- Advertisement -

எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகள் இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, எதிர்வரும் 4 மற்றும் 5 ஆகிய திகதிகளில் மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இதன்படி, எதிர்வரும் 4 ஆம் திகதி முற்பகல் 11 மணிமுதல் மாலை 5.30 வரை குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

மேலும், சட்டமூலங்கள் சிலவற்றை எதிர்வரும் 4 ஆம் திகதி முற்பகல் 10 மணிமுதல் 11 மணிவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்வரும் 5ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் இரவு 8 மணிவரை விவாதத்துக்கு எடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த விவாதத்தின் போது மதிய போசன இடைவேளைக்காக சபையை ஒத்திவைக்காது விவாதத்தை முன்னெடுத்து செல்லவும், நாடாளுமன்ற அமர்வுகள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முக்கியமானதொரு சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒரு தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்கட்சிகள் இதன்போது தெரிவித்திருந்தன.

எனினும், ஆளுங்கட்சியினர் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz