திருமதி உலக அழகி அழகி பட்டம் பெற்ற கரோலின் ஜுரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சற்றுமுன்னர் அவர் கொழும்பு கருவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தற்போது அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன், முன்னாள் மொடல் அழக சூல பத்மேந்திரவும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை திருமதி அழகியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியின் போது ஏற்பட்ட சர்ச்சை தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இதன்போது , மீண்டும் மகுடம் சூடப்பட்ட புஷ்பிகா டி சில்வா குறித்த இருவர் தொடர்பிலும் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.