இறக்குமதி செய்யப்படும் கிழங்குக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் இதனை அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

நுவரெலியாவில் கிழங்கு விளைச்சலை அறுவடை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாரிய அளவிலான விளைச்சல் எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் கிழங்குக்கான விசேட பொருட்கள் வரியை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் கிழங்கு கிலோ ஒன்றுக்கான விசேட பொருட்கள் வரி 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று நள்ளிரவு முதல் இந்த வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.