மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடிப்படைவாத விரிவுரை நடத்திய இருவர் பொலிஸ் வலையில்!

- Advertisement -

பாடசாலை மாணவர்களிடம்  அடிப்படைவாதத்தினை ஏற்படுத்தும் வகையில் விரிவுரைகளை நடத்திய குற்றச்சாட்டில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடுப்பு பிரினரால்  முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஒலுவில் பகுதியில்  நேற்று குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

- Advertisement -

ஒலுவில் பகுதியில் வசிக்கும்  30 மற்றும்  39 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்தப் பயிற்சி நெறி 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இதன்போது, மாணவர்களுக்கு சில பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஏற்க மறுத்த மாணவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அவ்வாறு தாக்குதல்களுக்கு இலக்கான மாணவர்களை தற்போது அடையாளங் கண்டுள்ளதாகவும், அவர்கள் சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்

வெளிநாட்டில் இயங்கும் அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம்  தொடர்பான  அமைப்புக்களுக்கு உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நோக்கில், இந்தப் பயிற்சி நெறி நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேக நபர்கள் பயங்கரவாத  விசாரணைப் பிரிவின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz