ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்ட கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன முன்னிலையில் அஜித் மானப்பெரும சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டி 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன நேற்று முன்தினம் நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்மானப்பெரும பெயரிடப்பட்டிருந்த நிலையில் நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.