மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையர்களுக்கு செலுத்தப்பட போகும் Sputnik V கொரோனா தடுப்பூசி..!

- Advertisement -

ரஷ்யாவிடம் இருந்து Sputnik V கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதியினை இலங்கை சினேகபூர்வமாக பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரும், கொரோனா தடுப்பூசிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

Sputnik V கொரோனா தடுப்பூசிக்கு தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி அளித்துள்ள நிலையில், அதன் முதல் தொகுதி விரைவில் பெற்றுக்கொள்ளப்படுமென கொரோனா தடுப்பூசிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ரஷ்யாவிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான உதவி கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சீனாவிடம் இருந்தும் ஒருதொகுதி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரும், கொரோனா தடுப்பூசிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க  மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, Oxford AstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பின்னர் இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz