மெய்ப்பொருள் காண்பது அறிவு

AstraZeneca தடுப்பூசியால் இரத்தம் உறைதல் அதிகரிக்கும் அபாயம்..? வெளியான ஆய்வு தகவல்..!

- Advertisement -

Oxford-AstraZeneca கொரோனா தடுப்பூசியில் இரத்தம் உறைதலை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதற்கான எந்தவிதமான அறிகுறிகளும் இல்லையென ஐரோப்பிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

டென்மார்க், நோர்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியினை பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து ஐரோப்பிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சில நபர்களுக்கு இரத்தக் கட்டிகள் உருவாகியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து  குறித்த நாடுகள் தடுப்பூசியினை பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இத்தாலியில் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 50 வயதுடைய ஒருவர் இரத்தம் உறைதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட ஐந்து மில்லியன் ஐரோப்பியர்களில் 30 பேர் thromboembolic எனும் நோய் தாக்கத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz