மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடும் எதிர்ப்பை எற்படுத்திய விளம்பரம் – அமேசனின் முடிவு…!

- Advertisement -

அமேசன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட கால்துடைப்பான் விளம்பரம் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் ஊடாக சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அமேசன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட கால்துடைப்பான் விளம்பரத்தில் இலங்கையின் தேசியக் கொடி அச்சிடப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சினால் பெய்ஜிங் நகரில் உள்ள இலங்கை தூதுரகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, இது தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்து, இலங்கையின் தேசியக் கொடியை தவறாகப் பயன்படுத்தி கால் துடைப்பான்கள் மற்றும் ஏனைய பொருட்கள் தயாரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்தது.

அத்துடன், இவ்வாறான எந்தவொரு உற்பத்தியையும் சந்தைப்படுத்துவதை நிறுத்துமாறு, அமேசான் நிறுவனத்திடம் சீனாவினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, அமேசன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட கால்துடைப்பான் விளம்பரம் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக, சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையின் தேசியக் கொடியுடனான எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்வதையும், அதனை விற்பனை செய்வதையும் நிறுத்துவதற்காக சீனாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடும் எதிர்ப்பை எற்படுத்திய விளம்பரம் - அமேசனின் முடிவு...! 1 கடும் எதிர்ப்பை எற்படுத்திய விளம்பரம் - அமேசனின் முடிவு...! 2 கடும் எதிர்ப்பை எற்படுத்திய விளம்பரம் - அமேசனின் முடிவு...! 3 கடும் எதிர்ப்பை எற்படுத்திய விளம்பரம் - அமேசனின் முடிவு...! 4

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz