மெய்ப்பொருள் காண்பது அறிவு

தலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடற்பரப்பை நீந்தி கடந்து 48 வயது பெண் சாதனை!

- Advertisement -

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து நேற்று அதிகாலை 4.10 அளவில் அவரது நீச்சல் பயணத்தை ஆரம்பித்து, மாலை 5.50 அளவில் தெலுங்கானாவைச் சென்றடைந்துள்ளார்.

- Advertisement -

தெலுங்கானா – ஹைதராபாத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஆசிரியர் ஒருவர்  குறித்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கமைய  30 கிலோமீற்றர் தூரமுடைய பாக் ஜலசந்தி கடற்பகுதியினை சுமார் 13 மணி 40 நிமிடங்களில்  நீந்தி இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் மிகவும் ஆழம் குறைந்த, ஆபத்தான பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியை கடந்த அவர் நீந்திச்சென்றுள்ளார்.

இதேவேளை, வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்தி சென்று, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் வந்தடைந்து சாதனை படைத்துள்ளார்.

இதன்படி, பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13 ஆவது நீச்சல் வீரராகவும், உலகளாவிய ரீதியில் இரண்டாவது வீராங்கணையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கணை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு பாக் ஜலசந்தி கடலை  நீந்தி கடப்பதற்கு இந்திய மற்றும் இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்திருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக குறித்த நீச்சல் பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சாதனையின் மூலம் சர்வதேச ரீதியிலான அனைத்து பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதற்காகவே இந்த நீச்சல் பயணத்தை மேற்கொண்டதாக சியாமளா கோலி எனும் குறித்த ஆசிரியை தெரிவித்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடற்பரப்பை நீந்தி கடந்து 48 வயது பெண் சாதனை! 1

தலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடற்பரப்பை நீந்தி கடந்து 48 வயது பெண் சாதனை! 2 தலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடற்பரப்பை நீந்தி கடந்து 48 வயது பெண் சாதனை! 3 தலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடற்பரப்பை நீந்தி கடந்து 48 வயது பெண் சாதனை! 4

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz