மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணசபை முறைமையை இல்லாது செய்ய முயற்சி..?

- Advertisement -

நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமாயின், பழைய முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்

இன்று காலை ஒலிபரப்பாகி அதிகாரம் நிகழ்ச்சியில், மாகாண சபைத் தேர்தல் குறித்து கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

- Advertisement -

இதேவேளை, எந்த முறையில் தேர்தல் இடம்பெற்றாலும், அதில் சிக்கல்கள் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதன்போது குறிப்பிட்டார்

இதனிடையே, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிறுபான்மை மக்களுக்கு தற்போது கட்டாய தேவையாக உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்

இதேவேளை, சிறுபான்மை மக்கள் ஒன்றிணைவதின் ஊடாக மாத்திரமே, எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தை சிறுபான்மையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார்.

ஏறாவூர் -மிச்நகர் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னர், தேர்தலை ஒருபோதும் நடத்த முடியாது என அமைச்சர் திணேஸ் குணவர்தன தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, நாட்டை இயக்குவதற்கு மாகாண சபை தேவையில்லை என்ற நிலைப்பாடொன்றை உருவாக்க, தென் இலங்கையைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கின்றார்

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் 7 மணியுடன் மூடப்படும்

சப்ரகமுவ மாகாணத்தில் மாலை 7 மணியுடன் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இதனை அறிவித்துள்ளார். இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தில் மருந்தகளுக்கு மாத்திரம் தொடர்ச்சியாக திறந்து வைப்பதற்கு...

Developed by: SEOGlitz