மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண சபைத் தேர்தலை விரைவில் முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

- Advertisement -

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உரிய அதிகாரிகளுக்கு  பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் சட்டமூலத்தை அல்லது அதிலுள்ள குழப்பகரமான விடயங்களை அகற்றி விரைவில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோரியுள்ளார்.,

- Advertisement -

தற்போது மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகள் இயங்கி வருவதாகவும் இது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை ஒன்றியப் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்,

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் கர்தினாலின் அங்கீகாரத்துடனேயே முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்,

அரசாங்கம் இந்த அறிக்கையை மறைக்க முற்படுவதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ள போதிலும் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகமான தகவல்கள் தவிர ஏனைய தகவல்கள் அனைத்தும் மக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்,

மேலும் ஜெனிவாவில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கு இலங்கை வழங்கிய இணை அனுசரணையை நாட்டிற்காகவே மீளப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்,

எவ்வாறாயினும் இது தொடர்பில் யாரும் பேசுவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz