மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு டேம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

- Advertisement -

கொழும்பு டேம் வீதியில்  சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டதன் பின்னரே தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டன.

- Advertisement -

இதற்கமைய,  குறித்த சடலம் குறுவிட்ட தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுடையது என மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் மேலதிக பகுப்பாய்வாளர் D.H.L.W. ஜயமான்னவினால் வெளியிடப்பட்டுள்ள பரிசோதனை முடிவுகளுக்கமைய, குறித்த பெண்ணின் மரபணு மாதிரி அவரது  தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகளுடன் ஒத்துபோகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, கொலை செய்யப்பட்டதன் பின்னரே தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துண்டிக்கப்பட்ட குறித்த பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பெண்ணின் சடலம்  கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில்,  பயணப்பை ஒன்றிலிருந்து கடந்த முதலாம் திகதி கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்,  கடந்த 2ஆம் திகதி மொனராகலை படல்கும்புற பகுதியில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz