மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் முன்வைப்பு

- Advertisement -

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை , நாடாளுமன்ற சபையில் இன்று முன்வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10.00 மணியளவில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமான நிலையில், சபை முதல்வர் திணேஷ் குணவர்தன குறித்த அறிக்கையை சபையில் முன்வைத்தார்

- Advertisement -

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீரவினால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கடந்த ஐந்தாம் கையளிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையிலேயே, குறித்த அறிக்கையை, சபை முதல் திணேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்ற சபையில் முன்வைத்தார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 2019 நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசாங்க அதிகாரிகள், அரசாங்க கூட்டுத்தாபனப் பணியாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் பழிவாங்கல்கள் குறித்து ஆராய்வதற்கு குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை, நாளைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz