மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகின் பல நாடுகளில் வேறு நாடுகளின் தேசியக்கொடிகள் அச்சிடப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சீனா தெரிவிப்பு

- Advertisement -

அமேசன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட கால்துடைப்பான் விளம்பரத்தில் இலங்கையின் தேசியக் கொடி அச்சிடப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சினால் பெய்ஜிங் நகரில் உள்ள இலங்கை தூதுரகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் குறித்த விளம்பரம் தொடர்பிலான விசாரணைளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தமது நாட்டு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தமது உத்தியோப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

- Advertisement -

எவ்வாறாயினும் பல நாடுகளிலும் வேறு நாடுகளுடைய தேசியக்கொடிகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இலங்கையின் அமைதி சுபீட்சம் மற்றும் சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு பல தசாப்தங்களாக தமது நாடு மதிப்பளித்து வருவதாக சீன தூதரகம் டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இலங்கையின் தேசியக் கொடி அச்சிடப்பட்டு அமேசன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட வர்த்தக விளம்பரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz