மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பாகிஸ்தானுடன் இணைந்து செயற்பட நடவடிக்கை!

- Advertisement -

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று மாலை 4 மணியளவில் அவர் நாட்டை வந்தடைந்தார்.

- Advertisement -

இதற்கமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன, மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வரவேற்றனர்.

இதன்போது, இலங்கை மற்றும் பாகிஸ்தான் தேசிய கீதங்கள் இசைத்து இராணுவ மரியாதையுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட அதிதிகளுக்கான வருகைப் புத்தகத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கையெழுத்திட்டார்.

அத்துடன், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினரும் பிரதமர் இம்ரான் கானுடன் வருகை தந்துள்ளனர்.

முக்கியமாக ஆடை மற்றும் அணிகலன், மருந்துப் பொருட்கள், விவசாய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகன உதிரிப் பாகங்கள், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், நிர்மானப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றிலான பாகிஸ்தானின் வர்த்தகத் தலைவர்களைக் கொண்ட ஒரு உயர் அதிகாரமுடைய வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவும் இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் ஆகியோரை சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.

இதற்கமைய, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பினனர், இரு தலைவர்களும் கூட்டு ஊடக சந்திப்பொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

இதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு அங்கமான பாகிஸ்தான், இலங்கையுடனான தொடர்புகளை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அத்துடன், தீவிரவாதத்தைப் போலவே கொரோனா தொற்று சவாலையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் அதிக அளவிலான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளுக்கு இடையிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

அத்துடன், ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை, இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான தகவல் பகிர்வின் மூலம், கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பாகிஸ்தானுடன் இணைந்து செயற்பட நடவடிக்கை! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக Saliya Pieris தெரிவு!

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி Saliya Pieris தெரிவு செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் 85 ஆவது தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்படி, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகளான, Kuvera de...

கிழக்கின் காடுகளை ஊடறுக்க போகும் விசேட இராணுவப்படை..!

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற காடழிப்பு நடவடிக்கைககளை கட்டுப்படுத்தும் நோக்கில், விசேட படையணியொன்றை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காடழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட...

பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடை 190 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 192 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

இந்தியாவின் ஆதரவை கோரும் கூட்டமைப்பு…!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா டெப்லிட்ஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா ஊடகங்களுக்கு இவ்வாறு...

புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினை தீர்வுக்கான பரிந்துரைகள் அவசியம் – அங்கஜன் கோரிக்கை

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இன்றைய மத்திய செயற்குழுக்கூட்டத்தில் உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

Developed by: SEOGlitz