- Advertisement -
குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 10 பெண் தொழிலாளர்கள் மற்றும் 2 ஆண் தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டம் ஸ்கல்பா பிரிவில், தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
- Advertisement -
இவர்களில் 06 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், 06 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.