நாட்டில் நட்டத்திற்கு உள்ளாகும் நிறுவனமாக இலங்கை மின்சார சபை முத்திரை குத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், மின்சார சபை குறித்து மக்கள் மத்தியில் காணப்படும் தவறான கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச நிறுவனங்களுக்கு மத்தியில் மின்சார சபையே முன்னிலையில் காணப்படுவதாக, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்களுக்கு மிகவும் நெருக்கமான நிறுவனமாக மின்சார சபை காணப்படுவதாகவும், மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாட்டின் அனைத்து நிறுவனங்களிலும் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.