தென்சூடான் ஜனாதிபதி Salva Kiir Mayardit இன் ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், தென்சூடான் ஜனாதிபதி Salva Kiir Mayardit கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என அவரின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தென்சூடான் ஜனாதிபதி Salva Kiir Mayarditயின் ஊடகப்பேச்சாளருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் பெரும்பாலும் ஜனாதிபதியின் பாதுகாப்பு படை அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.