மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு பிணை

- Advertisement -

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் perpetual treasuries  நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இலஞ்ச ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் perpetual treasuries  நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

- Advertisement -

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த இருவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், குறித்த இருவரும் தலா 5 லட்சம் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் தலா 50 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில்  செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை வெளிநாடு செல்வதற்கு  ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

மேலும், குறித்த இருவரின் கடவுச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த உத்தரவுக்கான நகல் பத்திரத்தை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க  சர்வதேச விமான நிலையத்திற்கும் அனுப்பிவைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz