மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – கைதானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை அண்மித்துள்ளது

- Advertisement -

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

பாதுகாப்பு முகக் கவசம்  மற்றும் சமூக இடைவெளியினை  தவிர்த்து செயற்பட்ட நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்  பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் மூன்றுமாத  காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இரண்டாயிரத்து 997  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இந்த நிலையில்,  கொழும்பு நகருக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு முகக் கவசம் இன்றி பயண நடவடிக்கையினை மேற்கொள்பவர்களுக்கு  Rapid antigen பரிசோதனை  மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்  பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாகாணங்களுக்கு பயணிப்பவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள், நடத்துனர்களுக்கு Rapid antigen  பரிசோதனை இன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்கள், பொது சந்தைகள் மற்றும் வாராந்த சந்தைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தொடர்ந்தும்  Rapid antigen  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவகிறது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாடு முழுவதும், 1 இலட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz