- Advertisement -
ஹல்துமுல்லை அரங்காவ பகுதியில் கற்பாறையொன்று சரிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் தனது தந்தையுடன் குரங்குகளைப் பார்வையிடுவதற்காக குறித்த பகுதிக்கு சென்ற நிலையில் கற்பாறை சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
வெளிமடை பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக ஹல்துமுல்லை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.