மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரத்தினபுரியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

- Advertisement -

காலி பலப்பிட்டிய பகுதியில் சுற்றுலா மேற்கொண்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த  அனைவரும் காலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என பலப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதனை அடுத்து, குறித்த தொற்றாளர்கள் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளங் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஹட்டன் – கினிகத்தேனை பகுதியில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் மூன்றுமாத குழந்தையும் உள்ளடங்குவதாக சுகாதார அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கினிகத்தேனை பிரதேச சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி கொடகவெல பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து  கொடகவெல நகரில் குறித்த முச்சக்கரவண்டி சாரதி சென்ற பல கடைகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த  சாரதி கடந்த சில நாட்களில் ஆறு பாடசாலை மாணவர்களை தமது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ள நிலையில், அவர்களையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த முச்சக்கரவண்டியில் பயண நடவடிக்கையினை மேற்கொண்டவர்களின்  விபரங்களை  சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொடகவெல பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 684 பேர் குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 567 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 355 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 764 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், 5 ஆயிரத்து 510 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz